‘வ குவார்ட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கி 7 வருடங்களுக்குப் பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினார்கள் காயத்ரி, புஷ்கர். மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். 100 நாட்களைக் கடந்து இந்தப் படம் ஓடியது. இந்தப் படத்துக்காக நிறைய விருதுகளும் கிடைத்தன.

Advertisment

gayatri pushkar

இந்நிலையில், இவர்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

“பல வருடங்களுக்கு முன்னால், இளம் இயக்குநர்களிடம் சில கதைகள் கேட்டோம். அந்தக் கதைகளைப் படமாகத் தயாரிக்க ஆசைப்பட்டோம். ஆனால், அப்போது சூழ்நிலை சரியில்லை. ஆனால், தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற எங்களுடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களுடைய முதல் தயாரிப்பு குறித்து நாளை அறிவிக்க இருக்கிறோம்” என்று பதிவில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="001a2a49-18b4-4e96-aa55-7d40b81a76cb" height="172" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_25.jpg" width="385" />

புஷ்கர் - காயத்ரி,‘விக்ரம் வேதா’படத்தை இந்தியில் இயக்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.